அபாண்டி: நான் எதையும் மறைக்கவில்லை; மகாதிருக்கு அஞ்சவில்லை

agசட்டத்துறைத்  தலைவர்(ஏஜி)   முகம்மட்    அபாடிண்டி    அலி,    தாம்  1எம்டிபி   ஊழல்  விவகாரம்   தொடர்பான   ஆதாரங்களை  மறைப்பதாக   முன்னாள்   பிரதமர்   மகாதிர்    குற்றம்   சாட்டுவதை   மறுக்கிறார்.

ஏஜி   என்ற   முறையில்   தாம்   எடுக்கும்  முடிவுகள்   அனைத்தும்    விசாரணை    அறிக்கைகளை   அடிப்படையாகக்  கொண்டவை  என்றாரவர்.

“இதில்  மறைப்பதற்கு   ஏதுமில்லை”,  என்றவர்   மலேசியாகினிக்கு    அனுப்பிய   குறுஞ்செய்தியில்  கூறினார்.

நேற்று,  மகாதிர்   அடுத்த   பொதுத்   தேர்தலில்   பக்கத்தான்  ஹராபான்   வெற்றிபெற்று   ஆட்சி   அமைத்தால்   அது  அபாண்டியிடம்   அதிகாரத்துவ   இரகசிய   சட்ட(ஓஎஸ்ஏ)த்தைப்   பயன்படுத்தி   ஆதாரங்களை   மறைத்தது   ஏன்  என்று   விளக்கம்   கேட்கும்    என்று   கூறியிருந்தார்.

ஆனால்,  இந்த   மிரட்டலுக்கெல்லாம்  அபாண்டி  அஞ்சவில்லை.

“நான்  மகாதிர்  உள்பட   எவருக்கும்   அஞ்சேன்.  நான்  இறைவனுக்கு  மட்டுமே  பயப்படுகிறவன்.  மனிதர்களுக்குப்  பயப்படுவதில்லை”,  என்றாரவர்.

கடந்த   ஆண்டு  ஜனவரியில்  அபாண்டி,    ரிம2.6பில்லியன்   நன்கொடை   விவகாரத்திலும்     எஸ்ஆர்சி   இண்டர்நேசனல்   விவகாரத்திலும்    பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   குற்றம்   எதுவும்  இழைக்கவில்லை     என்று   அறிவித்தார்.

1எம்டிபி   நிதிகள்   கையாடப்பட்டிருப்பதாக   அமெரிக்க   நீதித்துறை    கூறியிருப்பதையும்    அவர்   நிராகரித்தார்.