எம்ஆர்டி ஓர் அன்பளிப்பு அல்ல- பிகேஆர் தலைவர்

pkrமக்களுக்கு   வசதிகள்    செய்து  கொடுப்பது    அரசாங்கத்தின்   கடமை  ஐயா.  கடமை.  எம்ஆர்டி   திட்டத்தை   மக்களுக்குப்  பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்கின்   “அன்பளிப்பு”   என்று  கூறிய      தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே   சைட்   கெருவாக்குக்கு    என   பிகேஆர்   தலைமைப்   பொருளாளர்   டான்   ஈ  கியு   இவ்வாறு   பதிலடி   கொடுத்துள்ளார்.

“சாலேயால்   அன்பளிப்புக்கும்   ஆளும்  அரசாங்கத்தின்   பொறுப்புக்குமுள்ள    வேறுபாட்டைப்   புரிந்துகொள்ள  முடியவில்லையா?”,  என்று   டான்   இன்று   ஓர்    அறிக்கையில்   வினவினார்.

“சுங்கை  பூலோ- காஜாங்   எம்ஆர்டி  ரயில்  பாதைக்கு   ரிம21 பில்லியன்   செலவானது. அரசாங்க    கஜானாவில்   இருப்பது   ஜிஎஸ்டி   போன்ற   வரிகளால்   மக்களிடமிருந்து   பெறப்பட்ட   பணம்.

“அதனால்,  எம்ஆர்டி   திட்டத்தை   ஓர்   அன்பளிப்பு   என்று   சொல்லாதீர்கள்”,  என   டான்   கூறினார்.

அம்னோ- பிஎன்  அரசாங்கத்தின்   உண்மையான   “அன்பளிப்புகள்”   எவை   என்றால்   “கொடூரமான”  ஜிஎஸ்டி,   1எம்டிபி   ஊழல்,    மக்களுக்குத்   தொல்லைதரும்   விலைவாசி  உயர்வு   ஆகியவைதான்    என்றாரவர்.

அதன்   தலைவர்களின்    சொகுசு   வாழ்க்கைக்காக   மக்களை  வாட்டி   வதைக்கிறது   அம்னோ- பிஎன்  அரசாங்கம்   என்று   டான்   கூறினார்.