டிஏபி மறுதேர்தல்: ஆர்ஓஎஸ் முடிவை மாற்றிக்கொள்ளாது

rosடிஏபி  மறுதேர்தல்   நடத்தியாக    வேண்டும்   என்ற   முடிவில்   மாற்றமேதுமில்லை    எனச்  சங்கப்   பதிவகம் (ஆர்ஓஎஸ்)   திட்டவட்டமாக    அறிவித்தது.

“டிஏபி   உறுப்பினர்கள்    செய்த   புகார்களின்   அடிப்படையில்   ஆர்ஓஎஸ்  அந்த  முடிவைச்   செய்தது.  புகார்களை   ஆழமாக   ஆராய்ந்ததில்   புகார்  செய்ய  நியாயமான   காரணங்கள்  இருப்பதாக   ஆர்ஓஎஸ்  மனநிறைவு   கொள்கிறது”,  என   அதன்   தலைமை   இயக்குனர்    முகம்மட்   ரஸின்   அப்துல்லா   கூறினார்.

2012  கட்சித்   தேர்தலிலும்   2013-இல்  நடந்த   மறுதேர்தலிலும்   கலந்துகொண்ட  பேராளர்      எண்ணிக்கையில்    முரண்பாடுகள்   காணப்படுவதாக     அவர்   கூறினார்.

“பொய்யான   தகவல்களின்”   அடிப்படையில்    ஆர்ஓஎஸ்   மறுதேர்தலுக்கு     உத்தரவிட்டிருப்பதாக    டிஏபி    தலைமைச்   செயலாளர்   லிம்   குவான்   எங்   கூறியிருப்பது  குறித்துக்   கருத்துரைத்தபோது   ரஸின்   இவ்வாறு   கூறினார்.

2013  மறுதேர்தல்   சட்டத்துக்கிணங்க     நடத்தப்படவில்லை    என்று  கூறி   மறுபடியும்   தேர்தல்    நடத்த    வேண்டும்    என    ஆர்ஓஎஸ்  ஜூலை  1 7-இல்   டிஏபிக்கு   உத்தரவிட்டது.

2012  தேர்தலில்  865  கிளைகளிலிருந்து   2,576   பேராளர்கள்   கலந்துகொண்டார்கள்.  அதே   பேராளர்களைக்   கொண்டுதான்   மறுதேர்தலும்   நடத்தப்பட   வேண்டும்   என்று   அது  கூறியது.

மறுதேர்தல்   நடத்துவது   தொடர்பில்   டிஏபி   14    நாள்களுக்குள்  பதிலளிக்க   வேண்டும்.   தவறினால்    சங்கச்   சட்டங்களின்கீழ்   அதன்மீது   சட்ட    நடவடிக்கை    எடுக்கப்படும்.