ஆர்சிஐ உறுப்பினர்கள் இருவருக்கு எதிரான டாக்டர் மகாதிரின் மனு ஆகஸ்ட் 15-இல் விசாரணைக்கு வரும்

dr m கோலாலும்பூர்  உயர்  நீதி  மன்றம்,    1990களில்   பேங்க்  நெகராவுக்கு   ஏற்பட்ட   அந்நிய   நாணயச்  செலாவணி   இழப்பு   குறித்து   ஆய்வு  செய்யும்   அரச   விசாரணை  ஆணைய(ஆர்சிஐ)த்தில்  இடம்பெற்றுள்ள   இருவருக்கு   எதிராக   முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்   தாக்கல்   செய்துள்ள   மனுவை  ஆகஸ்ட்   15-இல்   விசாரணை   செய்யும்.

மகாதிரின்   வழக்குரைஞர்   ஹனிப்   காத்ரி  அப்துல்லா   இதனைத்   தெரிவித்தார்.

மகாதிர்,   ஆர்சிஐ   விசாரணை   தொடங்கிய    முதல்   நாளான   செவ்வாய்க்கிழமை    ஆணையத்தில்    முன்னாள்   அரசாங்கத்  தலைமைச்   செயலாளர்  முகம்மட்  சிடிக்   ஹசானும்     சாவ்   சூ   பூனும்   இடம்பெற்றிருப்பதை    ஆட்சேபித்து   அவர்களை   வெளியேற்ற   வேண்டும்    என்று   கேட்டுக்கொண்டார்.   ஆனால்,  அவரது  கோரிக்கை  வெற்றிபெறவில்லை.
அவ்விருவரும்   போரெக்ஸ்   இழப்பு  குறித்து    விசாரிக்க    ஏற்கனவே   அமைக்கப்பட்ட   பணிக்குழுவில்    இடம்பெற்றிருந்தவர்கள்    என்பதால்   ஆர்சிஐ-இல்   அவர்கள்  சுதந்திரமாக   செயல்பட   மாட்டார்கள்   என்ற   அடிப்படையில்   அவர்களின்  நியமனத்தை    மகாதிர்   எதிர்த்தார்.

அவரின்  கோரிக்கையைத்   தள்ளுபடி   செய்த   சிடிக்,  அவ்விரு   நியமனங்களும்  “பேரரசரின்   ஒப்புதலுடன்   செய்யப்பட்டவை”  என்றார்.

அதன்பின்னர்,  மகாதிர்  சிடிக்கின்  முடிவை   நீதிமுறை  மேலாய்வுக்குக்  கொண்டு  செல்லத்  தீர்மானித்தார்.