நடு வழியிலேயே நின்று போன ராணுவ டாங்குகள் : இதையெல்லாம் வச்சிக்கிட்டு சீனா கூட எப்படி போருக்கு போக போறீங்க..?

ரஷ்யாவில் நடைபெற்ற ராணுவ டாங்குகளுக்கான சர்வதேச போட்டியில், இந்தியாவில் இருந்து பங்கேற்ற இரண்டு டாங்குகள் இயந்திர கோளாறால் நடுவழியில் ஓடாமல் நின்றது. இதனால் இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.

உலக நாடுகள் தங்களிடம் உள்ள டாங்குகளின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாக, 19 நாடுகள் பங்குபெற்ற அகில உலக டாங்க் பையாத்லான் என்கிற போட்டி, ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ மண்டலத்தில் நடைபெற்றது.

இதில், இந்திய ராணுவத்தில் இருந்து இரண்டு டி-90 டாங்குகள் பங்கேற்றன. இந்த போட்டியில், உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் வகை டாங்குகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் , ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட டி-90 டாங்குகள் அனுப்பிவைத்தது இந்திய ராணுவம்.

இந்த போட்டியில் பங்கேற்ற இரண்டு டி-90 டாங்குகளுமே அரையிறுதிப் போட்டியில் ஓடிக்கொண்டிருக்கும் போதே எந்திரக் கோளாறு ஏற்பட்டு திடீரென நடுவழியிலே நின்றுவிட்டன.

இதனால் இறுதி சுற்றிற்கு போகக்கூடிய தகுதியை பெறுவதற்கு இந்தியாவால் முடியவில்லை.

இதில், ரஷ்யா, பெலாரஸ், கசகஸ்தான், சீனா ஆகிய நான்கு நாடுகள் மட்டும் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றன

-tamilcnn.lk

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)