சுஹாகாம்: ஆயர் மோலெக் லோக்கப் நிலைமை கொடுமையானது, மனிதத்தன்மை அற்றது

 

AyerMoleklockupஜோகூர் பாரு, ஆயர் மோலெக் போலீஸ் லோக்கப் நிலைமை துயரப்படத்தக்கதாக இருக்கிறது. ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்தை நிலைநிறுத்த முடியாது என்றால், அது மூடப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) கூறுகிறது.

அந்த லோக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் வசதிகள் அவர்களுக்கு சுகாதார கேடுகளை விளைவிக்கக்கூடியதாக இருக்கின்றன. மேலும், அவர்களுக்கு போதுமான உணவும் தண்ணீரும் தரப்படுவதில்லை என்று சுஹாகாம் தலைமை ஆணையர் ரஸாலி இஸ்மாயில் கூறுகிறார்.

அந்த லோக்கப்பில் காணப்படும் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது. அவை கொடுமையானவை மற்றும் மனிதத்தன்மையற்றவை என்று சுஹாகாம் கருதுகிறது என்றாரவர்.

தடுப்புக்காவல் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரங்கள் நிலைநிறுத்தப்பட முடியாது என்றால். ஆயர் மோலெக் மற்றும் இதே போன்ற நிலைமைகளில் இருக்கும் இதர தடுப்புக்காவல் நிலையங்கள் மூடப்பட்டேயாக வேண்டும் என்று ரஸாலி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கைஉஇல் கூறுகிறார்.

நிதி பற்றாக்குறை என்ற சாக்குப்போக்கைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.