பினாங்கு சுரங்கப் பாதை பொது டெண்டருக்கு விடப்பட்டது என்பதை மறவாதீர்: நஜிப்புக்கு டிஏபி பதிலடி

contractடிஏபி   தலைவர்   ஒருவர்,  பினாங்கு   சுரங்கப்பாதை   திட்டம்   புத்ரா  ஜெயாவின்  எம்ஆர்டி    திட்டம்போல்   அல்லாமல்   பொது   டெண்டருக்கு   விடப்பட்டது   என்றுரைத்து   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்குக்குப்  பதிலடி  கொடுத்துள்ளார்.

நஜிப்   சுரங்கப்பாதை   அமைப்பதற்கான   செலவு   அதிகம்   என்று   குறைகூறியிருப்பதை   டிஏபி -இன்  தேசிய  விளமபரப்  பிரிவுச்   செயலாளர்   டோனி   புவா  அது  ஒரு    ”வெட்கக்கேடான”  குற்றச்சாட்டு  என்றார்.

“இது  அடிப்படையற்ற   குற்றச்சாட்டு.  பினாங்கில்   சுரங்கப்பாதையும்   நெடுஞ்சாலைகளும்  அமைக்கும்    குத்தகை  பொது  டெண்டர்வழி   கொடுக்கப்பட்டது.

“மறுபுறம்,   எம்ஆர்டி-க்கான    ஏறத்தாழ  ரிம30பில்லியன்   குத்தகை,  பொது  டெண்டருக்கு  விடப்படாமல் ,   நேரடிப்  பேச்சுக்கள்வழி   கமுடாவுக்குக்  கொடுக்கப்பட்டது”,  என  புவா    இன்று   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

“நாட்டின்  60ஆம்   ஆண்டு   சுத்ந்திரத்தைக்  கொண்டாடும்   மலேசியர்கள்   நேர்மையற்ற    ஒரு  பிரதமால்    ஆளப்படுவதை    எண்ணி  உண்மையிலேயே   வெட்கப்படுகிறார்கள்”,  என்றாரவர்.