போர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதேச நீதிபதிகள் பங்கேற்க முடியும்: திலக் மாரப்பன

tilak‘இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள், வழக்கை விசாரிப்பவர்களாக பங்கேற்க முடியாது. அதற்கு அரசியலமைப்பிலும் இடமில்லை. ஆனால், விசாரணையைக் கண்காணிக்கும் நபர்களாக பங்கேற்க முடியும்.’ என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைக்கு பாதகமான எந்தவொரு அம்சமும் இல்லை. குறித்த தீர்மானத்திலுள்ள அம்சங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திலக் மாரப்பன, நேற்று வெள்ளிக்கிழமை தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: