உயரம் குன்றியவர்களுக்கான சர்வதேசப் போட்டி: 3 தங்கத்தை வென்ற தமிழக வீரர் கணேசனுக்கு உற்சாக வரவேற்பு

ganesanஉசிலம்பட்டி: கனடாவில் நடைபெற்ற சர்வதேச உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய கணேஷுக்கு உசிலம்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கனடாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார். 29 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் 13 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இங்கு நடத்தப்பட்ட பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்று 37 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் 5 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

ganesanஇதில் உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் மட்டும் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். அவர் பதக்கங்களை வென்ற மகிழ்ச்சியோடு தயாகம் திரும்பினார். அப்போது அவரது சொந்த ஊரான உசிலம்பட்டி மாதரை கிராமத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பைக் கிராம மக்கள் அளித்தனர். வெடி வெடித்து, தாரைப்தப்பட்டை அதிர மக்கள் கொடுத்த மரியாதையை கணேஷ் மனம் மகிழ பெற்றுக் கொண்டார்.

இந்திய அணி சார்பில் விளையாடிய கணேஷ் குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் என மூன்று பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டியில் வென்ற தங்க மாரியப்பனுக்கு அளித்த உதவிகள் போல தனக்கும் நிதி உதவிகள் வழங்கி ஊக்கப்படுத்தினால் மேலும் பல போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பேன் என கணேஷ் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: