பதவி உறுதிமொழியை மீறியதாக பிரதமர் மற்றும் துணைப்பிரதமர்மீது வழக்கு

courtநம்பிக்கை  மோசடி   செய்தார்கள்   என்று  கூறி   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்  மீதும்  துணைப்  பிரதமர்   அஹமட்   ஜாஹிட்   ஹமிடிமீதும்   கைருடின்   அபு  ஹசான்  வழக்கு  தொடுத்துள்ளார்.

அவ்விருவரும்   நஜிப்பின்  சொந்த  வங்கிக்  கணக்கில்   இருந்த   யுஎஸ்$681 மில்லியன்  குறித்து   மக்களிடம்   தவறான   செய்திகளைக்  கூறி  வந்ததாக   அம்னோ  முன்னாள்   உறுப்பினர்   கைருடின்   குற்றம்   சாட்டினார்.

அப்படிச்  செய்ததன்வழி   அவ்விருவரும்   அவர்கள்   எடுத்துக்கொண்ட   பதவி  உறுதிமொழியை  மீறி  விட்டனர்.

அவர்கள்  பதவி  உறுதிமொழியை  மீறி   விட்டதாகவும்   அதன்  காரணமாக   பதவியில்  இருக்க  தகுதியற்றவர்கள்   என்றும்  நீதிமன்றம்   அறிவிக்கக்  கோரி   கைருடின்  மனுச்  செய்து  கொண்டுள்ளார்.

நஜிப்பின்   வங்கிக்  கணக்கில்   இருந்த   ரிம2.6 பில்லியன்,  சவூதி  அரச  குடும்பத்தைச்  சேர்ந்த   ஒருவர்   அளித்த    நன்கொடை   என்று  கூறப்பட்டது. அதைச்   சட்டத்துறைத்   தலைவர்   முகம்மட்  அபாண்டி  அலியும்   உறுதிப்படுத்தினார்.

ஆனால்,  நஜிப்பின்  அரசியல்   எதிரிகள்   அதை  ஏற்கவில்லை.  அது  1எம்டிபி  பணம்   என்கிறார்கள்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • Beeshman wrote on 14 September, 2017, 19:55

    சட்டத்துறைத் தலைவர் அப்பாண்டி, சுப்பாண்டியெல்லாம் நஜிப்பின் சுட்டுவிரல் அசைவுக்கேற்ப நடனமாடுபவர்கள். யார் குட்டிக்கரணம் போட்டாலும் எதுவும் நடவாது ! வருகிற தேர்தலில் இந்த நரியை தூக்காவிடில் பின் சிவ சிவா என்று போகவேண்டியதுதான் !

  • S.S.Rajulla wrote on 15 September, 2017, 14:08

    பணம் சவுதியில் இருந்து வந்ததோ அல்லது மோடியிடம் இருந்து வந்ததோ – அதுபற்றி கேள்வி இல்லை , ஒரு நாட்டு பிராமருக்கு வெளியாட்கள்  வெளி நாட்டிலிருந்து எதற்கு இவ்வளவு பெரிய தொகை சொந்த வங்கி கணக்குக்கு அனுப்பவேண்டும் ? நன்கொடை என்றால் UMNO பேருக்கு அனுப்பவேண்டியது தானே ??  சுண்டெலி – சிக்கிக்கொண்ட பிறகு , நான் திருட வரவில்லை – சாப்பிடத்தான் வந்தேன் என்று கதை சொன்னதாம் !! 

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)