மது அருந்துவதால் மட்டும் வருடா வருடம் 2.5 மில்லியன் சாவு

kikoliஉலக சுகாதார அமைப்பு வருடத்திற்கு 2.5 மில்லியன் பேர் மது அருந்துதல் காரணமாக இறந்துவிடுவதாகவும், 4 சதவித மரணங்கள் குடிப்பழக்கத்தாலே ஏற்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. எய்ட்ஸ், வன்முறை அல்லது காசநோய் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளைவிட மதுவின் காரணமாக மிக அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றது எனவும், அதிகப்படியான மது அருந்தும் நாடுகளையும், அவற்றின் மது நுகர்வு விகிதங்களையும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

பொதுவாக வளர்ந்த நாடுகளில் மதுப் பழக்கம் மிக அதிக அளவிலும், இஸ்லாமிய மக்கள் அதிகமுள்ள நாடுகளில் மது பழக்கம் குறைந்த விகிதத்திலும் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிகமாக மது அருந்தும் முதல் 25 இடங்களைப் பிடித்த நாடுகள் பின்லாந்து ஜெர்மனி லக்ஸம்பர்க் ஆஸ்திரியா நெதர்லாந்து ஸ்லோவாக்கியா டென்மார்க் பிரித்தானியா பிரான்ஸ் அயர்லாந்து போர்ச்சுகல் தென் கொரியா லூதியானா குரோஷியா பெலாரஸ் ஸ்லொவேனியா ரொமானியா அண்டோரா எஸ்தோனியா உக்ரேன் ரஷ்யா ஹங்கேரி செக் ரிபப்ளிக் மால்தோவா லத்வியா ஆகிய நாடுகள் முதல் 25 இடங்களில் உள்ளன. மேலும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுபானங்களில் முதலிடம் பெற்றது பீர்தான் எனவும்,

சிலர் குடிப்பதற்காகவே தொழிற்சாலைகள் சொந்தமாக வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.com