20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- சிறிலங்கா உச்சநீதிமன்றம்

srilanka_flagசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு அரசியலமைப்பின் சில பிரிவுகளுக்கு முரணாக இருப்பதாகவும், இதனால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட பின்னர், பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

-puthinappalakai.net

TAGS: