அஸ்மின் உதவியாளரை சாட்சியாக எம்சிஎம்சி அழைத்துள்ளது

azminஎம்சிஎம்சி எனப்படும் மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையம் தான் நடத்தும் விசாரணையில் சாட்சி வாக்குமூலத்தை அளிப்பதற்கு நாளை வருமாறு பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின்  உதவியாளரை அழைத்துள்ளது.

ஜனவரி 18ம் தேதி அஸ்மின் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில் சைபுல் அஸ்ராப் இட்ரிஸ் என்னும் அந்த உதவியாளர் அழைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது என அஸ்மினுடைய சிறப்பு  அதிகாரி ஹில்மன் இட்ஹாம் இன்று ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“அஸ்மினுக்கு எதிராக கடந்த மார் 13ம் தேதி தொடங்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் சைபுல் அஸ்ராப் அழைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்,” என இட்ஹாம் சொன்னார்.

azmin1“சபாவில் அடையாளக் கார்டு விநியோகப் பிரச்னை தொடர்பாக ‘Program Tukar Orang Melayu (மகாதீரின் அடையாளக் கார்டு திட்டம்) என்னும் தலைப்பில் யூ டியூப் இணையத் தளத்தில் சேர்க்கப்பட்ட வீடியோ மீது அவர் வெளியிட்ட அறிக்கை சம்பந்தப்பட்டது அந்த விசாரணை என நாங்கள் கருதுகிறோம்.”

அந்நிய குடிமக்களுக்கு அடையாளக் கார்டுகள் வழங்கப்படுவதை அந்த வீடியோ காட்டியது. அஸ்மின் அறிக்கை அந்த வீடியோ சம்பந்தப்பட்டதாகும்.

அந்த வீடியோவை தயாரித்ததில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அஸ்மின் மறுத்துள்ளார்.

மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையச் சட்டத்தின் 225வது பிரிவின் கீழ் அந்த விசாரணை நடத்தப்படுகின்றது.

 

TAGS: